பொதுமக்களுடன் இணைந்து முளைப்பாரி எடுத்த நடிகர் கார்த்தி!

  • பொதுமக்களுடன் இணைந்து முளைப்பாரி எடுத்த நடிகர் கார்த்தி.
  • விவசாயம் செய்ய அனைவரும் முன்வர வேண்டும். 

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள கிளாம்பாடியில் காளிங்கராயன் கால்வாய் தின விழா இன்று கொண்டாடப்பட்டது. ஊர் மக்களின்  அனைவரும் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்று காளிங்கராயன் கால்வாயை வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தியும் கலந்து கொண்டு பொதுமக்களுடன் இணைந்து முளைப்பாரி எடுத்துச் சென்று, காளிங்கராயன் கால்வாயில் முளைப்பாரியை விட்டு மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கார்த்தி, இந்த காளிங்கராயன் கால்வாய் பல நூற்றாண்டுகள் கடந்தும் இன்றும் பயன்பாட்டில் உள்ளது. இதனை யாரும் மாசுபடுத்தக் கூடாது. இந்த வாய்க்காலில் தொழிற்சாலை கழிவுகள் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் அவர் விவசாயம் குறித்து பேசுகையில், விவசாயம் என்றாலே வயதானவர்கள் தான் செய்ய வேண்டும் என்ற நிலை உள்ளது. அந்த நிலை மாற வேண்டும், ஏனென்றால், பெரியவர்கள் நம் கையில் தான் விவசாயத்தை விட்டுவிட்டு சென்றுள்ளனர். எவ்வளவு சம்பாதித்தாலும் விவசாயத்தை விட்டுவிட கூடாது என கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.