இஸ்ரோவின் ஜிசாட்-30 வெற்றிக்கு இந்திய பிரதமர் வாழ்த்து..

  • வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்ட ஜிசாட்-30.
  • இந்த வெற்றிக்காக பிரதமர் மோடி இஸ்ரோவிற்க்கு வாழ்த்து.

நேற்று காலை( ஜனவரி 17-ஆம் தேதி )துள்ளியமாக கூறினால் அதிகாலையில் 2.35 மணியளவில் இந்தியாவின் தொலைதொடர்பு மற்றும் ஒளிபரப்பு சேவைகளுக்கான, ‘ஜிசாட் – 30’ என்ற  செயற்கைக்கோள்,  வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கை கோள் தென் அமெரிக்காவின்  பிரென்ச் கயானாவின் கோரோ பகுதியில் உள்ள ஏரியன் விண்வெளி தளத்திலிருந்து  ‘ஜிசாட் – 30’ மற்றும் இடுல்சாட் என்ற விண்வெளி நிறுவனத்தின், ‘இடுல்சாட் கோனக்ட்’ செயற்கைக் கோள்களுடன், ஏரியன் – 5′  என்ற ராக்கெட், சரியாக இன்று அதிகாலை 2.35 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இந்த வெற்றியை  வாழ்த்தும் விதமாக பிரதமர் மோடி  வாழ்த்து தெரிவித்துள்ளார், அதில், நடப்பு 2020 ம் ஆண்டுக்கான  முதல் செயற்கை கோளை ஏவிய இஸ்ரோ அமைப்பிற்கு இந்திய மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் மற்றும் ‘ஜிசாட் – 30’ அதன் அதன் தனித்துவமான உள்ளமைவுடன் டிடிஎச் தொலைக்காட்சி சேவைகள், ஏடிஎம்களுக்கான இணைப்பு, பங்குச் சந்தைகள் மற்றும் மின்-ஆளுமை ஆகியவற்றை வழங்கும் எனவும் இந்த செயற்கை கோளின் சிறப்பு அம்சங்களையும் தெரிவித்து உள்ளார்.

 

 

author avatar
Kaliraj