மக்களவை தேர்தலுக்கு தமிழகத்தில் மொத்தம் 1,587 வேட்பு மனுக்கள்-தலைமை தேர்தல் அதிகாரி

மக்களவை தேர்தலுக்கு தமிழகத்தில் மொத்தம் 1,587 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது  என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ  தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை  தேர்தல் நடைபெற உள்ளது.தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 தொகுதிகளுக்கான  தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.தற்போது தமிழகத்தை பொருத்தவரை  ஏப்ரல் 18-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,பிரதான கட்சிகள் அனைத்தும் வேட்பாளர்களை அறிவித்து வேட்புமனுக்களையும் தாக்கல் செய்தது.அதன் மீதான பரிசீலனையும் நடைபெற்றது.

Image result for தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ 

இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தேர்தல் வேட்புமனு தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.அவர் கூறுகையில்,மக்களவை தேர்தலுக்கு தமிழகத்தில் மொத்தம் 1,587 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது ,1587 வேட்பு மனுவில், 655 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது, 932 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

18 தொகுதி இடைத்தேர்தலுக்காக 518 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது, இதில் 305 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றும்  தேர்தல் தொடர்பாக இதுவரை 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

அதேபோல்  திமுக மீது 10, அதிமுக மீது 9, பாஜக மீது 2, பாமக மீது 3, மக்கள் நீதி மய்யம் கட்சி மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.அமமுக-வுக்கு சின்னம் ஒதுக்குவது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என்றும் தமிழகத்தில் இதுவரை ரூ 50.70 கோடி பணம், 223.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ  தெரிவித்துள்ளார்.

Leave a Comment