மெரினாவில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு பாதை இன்று திறப்பு..!

மெரினாவில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு பாதை இன்று திறப்பு..!

Default Image

சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டு உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு நடைபாதை இன்று திறப்பு. 

சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டு உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான நிரந்தர நடைபாதை வசதியை இன்று முதலமைச்சர் முக ஸ்டாலின் திறப்பு வைக்கிறார். இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி அறிவிப்பில், சென்னை மெரினா கடற்கரையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பாதை இன்று திறந்து வைக்கப்பட உள்ளது.

மெரினா கடற்கரை செல்லும், மாற்றுத்திறனாளிகள் மணல் பரப்பில் சென்று கடலை ரசிப்பதில் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர். இதையடுத்து, அவர்களும் கடலை சிரமமின்றி ரசிக்கும் வகையில், சிறப்பு பாதை அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்தது.

அதன்படி, விவேகானந்தா இல்லம் எதிரே சவுக்கு, கருவேல மரங்களைக் கொண்டு ரூபாய் 1 கோடியே 10 லட்சம் மதிப்பில், 380 மீட்டர் நீளம், 3 மீட்டர் அகலத்தில் நிரந்தர பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் தற்போது நிறைவடைந்த நிலையில் இன்று சிறப்பு நடைபாதை திறக்கப்படவுள்ளது.

Join our channel google news Youtube