இன்று திருவண்ணாமலையில் தீபத்திருவிழா…!

இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா இன்றைய தினம்  கொடியேற்றத்துடன் விமர்சையாக தொடங்க உள்ளது. இன்று கொடியேற்றம் தொடங்கி 10 நாட்கள் இந்த விழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.

கொரோனா பரவலால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பழைய உற்சாகத்துடன் மீண்டும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா இந்த ஆண்டு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. திருவிழாவுக்காக தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து 25 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து  கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்படுகிறது.

Leave a Comment