கோபாலபுரம் குடும்பத்தின் ஊடகங்களால் தமிழகத்திற்குத் தலைகுனிவு – அண்ணாமலை

எந்தவித முயற்சியையும் எடுக்காமல் பொய்களைப் பரப்பி வரும் திமுக என மாநில தலைவர் அண்ணாமலை குற்றசாட்டு.

தமிழகம் வஞ்சிக்கப்பட்டது என்று பொய்களைப் பரப்பி வரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், திமுகவினர் மற்றும் கோபாலபுரம் குடும்பத்தின் ஊடகங்களால் தமிழகத்திற்குத் தலைகுனிவு என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், உண்மை அறிவோம், Khelo India திட்டத்தின் மூலமாக அனைத்து மாநிலங்களிலும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கவும், விளையாட்டு உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும் மாநில அரசின் திட்டப் பரிந்துரைகளின் அடிப்படையில் மத்திய அரசு நிதி வழங்கி வருகிறது.

ஆனால் இந்த திட்டத்தைப் பற்றி எதுவுமே தெரியாமல், தெரிந்து கொள்ள எந்தவித முயற்சியையும் எடுக்காமல் பொய்களைப் பரப்பி வரும் பாராளுமன்ற உறுப்பினர்கள், திமுகவினர் மற்றும் கோபாலபுரம் குடும்பத்தின் ஊடகங்களால் தமிழகத்திற்குத் தலைகுனிவு. இது ஒரு demand driven திட்டம்.

மற்ற மாநிலங்கள் இந்த திட்டத்தைச் சரியாகப் பயன்படுத்தி மத்திய அரசிடம் நிதி பெற்று தங்களது மாநில விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்தியுள்ளனர். மாநில பட்டியலில் உள்ள விளையாட்டுத் துறைக்கு நமது மத்திய அரசு நிதி உதவி வழங்கி வருகிறது. அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள இந்த திறனற்ற திமுக அரசு தவறிவிட்டது என்பதே நிதர்சனமான உண்மை என கூறியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment