தடுமாறிய கூகுள்… 40,000க்கும் மேற்பட்ட புகார்கள்.!

கூகுள் பயன்கள் அளித்த புகார் தற்போது வரையில் 40,000 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

கூகுள் நிறுவனம் நேற்று மாலை முதல் பல்வேறு சிக்கல்களை சந்தித்துள்ளது. இதனால்,  பல்வேறு நாடுகளில் பயனர்கள் பல்வேறு சிக்கல்களை சந்தித்தனர்.

இதனால்  பாதிக்கப்பட்ட கூகுள் பயனர்கள் downdetector.com எனும் கூகுள் புகார் தளத்தில் புகார் அளித்தனர். இதில், புகார் அளித்தவர்களின் எண்ணிக்கை, தற்போது வரையில் 40,000 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

அமெரிக்காவை தொடர்ந்து , லண்டன்,  ஆஸ்திரேலியா , சிங்கப்பூர் ஆகிய நாடுகளை சேர்ந்த கூகுள் பயனர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அவர்களும் புகார் தெரிவித்துள்ளனர்.

நேற்று இணையத்தில் #GoogleDown எனும் ஹேஸ்டேக் டிவிட்டரில் ட்ரெண்டிங் செய்தும் தங்கள் புகார்களை டிவிட்டர் மூலம் தெரிவித்தனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment