இப்படி போனா ஒரு படம் கூட வராது.! வலிமை மீது புத்தம் புது புகார்.! செஞ்சது யாரு தெரியுமா.?!

இப்படி போனா ஒரு படம் கூட வராது.! வலிமை மீது புத்தம் புது புகார்.! செஞ்சது யாரு தெரியுமா.?!

Default Image

வலிமை படத்தில் வழக்கறிஞர்களை தவறாக காட்டுகின்றனர் என கூறி வழக்கறிஞர் சங்கம் புகார் அளித்துள்ளனர். 

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் கடந்த 24-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் வெளியான திரைப்படம் வலிமை. ஆக்சன் கலந்த செண்டிமெண்ட் திரைப்படமாக இப்படம் வெளியாகியது. வெளியான நாளிலிருந்து தற்போது வரை ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வந்தாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த திரைப்படத்தில் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களை ஒரு கும்பல் தங்களது சுய லாபத்திற்காக தவறான பாதைக்கு திசை திருப்புவது போன்றும், அதனை ஒரு போலீஸ் அதிகாரி எப்படி கண்டுபிடித்து சரி செய்கிறார் என்பது கதையாக அமைக்கப்பட்டிருக்கும்.

மேலும், படத்தில் வில்லன் குரூப்பில் சில வழக்கறிஞர்கள் இளைஞர்களை தவறானபாதைக்கு திருப்ப முயற்சிக்கும் படி காட்சிகள் இருக்கும். இதனால், வழக்கறிஞர் சங்கம் வலிமை படத்தின் மீது புகார் அளித்துள்ளனர்.

வலிமை படத்தில் வழக்கறிஞர்களை தவறாக காட்டுகின்றனர் என கூறி அதனை நீக்க சொல்லியும் கூறிவருகின்றனராம். ஏற்கனவே படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வருகிறது. இதில், இதுவேறையா என படக்குழு வருத்தத்தில் உள்ளனர்.

வலிமை திரைப்படம்மட்டுமின்றி இதற்கு முன்பு வெளியான பல திரைப்படங்களில் வழக்கறிஞர்களை தவறாகவும், வில்லன்களாகவும் காட்டப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Join our channel google news Youtube