உழவர் பக்கம் இருப்போம் சொல்லும் நீங்கள் ஏன்? தீர்மானத்தை நிறைவேற்றவில்லை – முதல்வர் கேள்வி

பல மாநிலங்களில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றி நிலையில், அதிமுக ஆட்சியில் ஏன் நிறைவேற்றவில்லை என முதல்வர் கேள்வி.

தமிழக சட்டப்பேரவையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்கள் எதிரான தீர்மானத்தில் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தில் கூட ஒருமனதாக தான் போட்டுள்ளோம். நீங்களும் ஏற்றுக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில் தான் இந்த தீர்மானத்தை கொண்டுவந்துளோம்.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தின் வாசகத்தில் கூட ஒருமனதாக நிறைவேற்றப்படும் என்று கூறியிருக்கிறோம். ஆனால், பாஜக எதிர்ப்பு தெரிவித்துவிட்டு வெளிநடப்பு செய்துவிட்டார்கள். அதனால், சபையில் இருக்கும் பெருபான்மையை வைத்து இந்த தீர்மானத்தை ஏற்றுக்கொள்கிறீர்களா? இல்லையா என்று எதிர்க்கட்சி தலைவர் சொல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுகவும் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தது. இதனைத்தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக அரசு எப்போதும் உழவர் பக்கம் தான் இருப்போம், உழவர்களுக்காக போராடுகிறோம் என்று சொன்னதை எல்லாம் ஏற்றுக்கொள்கிறேன்.

பல மாநிலங்களில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், அதிமுக ஆட்சியில் இருந்த போது, ஏன் வேளாண் சட்டங்களை எதிர்த்து அல்லது திரும்ப பெற வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றவில்லை, இதில் என்ன தயக்கம் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுகவால் செய்ய முடியாததை, தற்போது திமுக செய்கிறது. அதனால் இந்த தீர்மானத்தை நிறைவேற்று தரும்படி கேட்டுக்கொள்கிறேன் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இதனிடையே, வேளாண் சட்டங்களுக்கு எதிராக பேரவையில் தீர்மானம் கொண்டுவந்ததை கண்டித்து அதிமுக, பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததையடுத்து, மற்ற கட்சிகளின் ஆதரவுடன் குரல் வாங்கெடுப்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பது குறிபிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்