இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 45,951 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 817 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,03,62,848 ஆக அதிகரித்துள்ளது.
- கடந்த 24 மணி நேரத்தில் 45,951 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட 8 ஆயிரம் அதிகம். கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,03,62,848 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 817 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 3,98,454 பேர் உயிரிழந்துள்ளனர்.
- தொற்றில் இருந்து ஒரே நாளில் 60,729 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,94,27,330 ஆக உயர்ந்துள்ளது.
- இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 5,37,064 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- நாட்டில் இதுவரை 33,28,54,527 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.