ஏ.டி.எம்களில் நூதன முறையில் கொள்ளையடித்த நஜீம் உசேனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

எஸ்பிஐ வங்கிகளின் ஏடிஎம்களில் நூதன முறையில் கொள்ளையடித்த நஜிம் உசேனை ஜூலை 13-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள பல எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களை குறிவைத்து கடந்த 17ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரையில் நூதன முறையில் கொள்ளையடித்து வந்த 2 நபர்கள் ஏற்கனவே அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த கொள்ளை கும்பல் இதுவரை தமிழகம் முழுவதுமுள்ள 30 வங்கிகளில் 1 கோடிக்கும் மேல் கொள்ளையடித்துள்ளதும் கண்டறியப்பட்டது.
இந்நிலையில், இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய மூன்றாவது நபர் நஜிம் உசேன் என்பவர் அண்மையில் அரியானாவில் போலீசாரால் கைது செய்யப்பட்டு விமானம் மூலமாக சென்னை வந்தடைந்தார்.
அதன் பின்பாதாக ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்ட நஜீம் நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் அடுத்த 15 நாட்களுக்கு அதாவது ஜூலை 13-ஆம் தேதி வரை நஜீமை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
author avatar
Rebekal