சிபிசிஐடி விசாரணைக்கு பின் சிவசங்கர் பாபா புழல் சிறையில் அடைப்பு….!

சிபிசிஐடி விசாரணைக்கு பின் சிவசங்கர் பாபா புழல் சிறையில் அடைப்பு.

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டிருக்கும் சிவசங்கர் பாபாவை 3 நாட்கள் காவலில் எடுத்து சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஆனால், 2 நாட்கள் மேற்கொண்ட விசாரணையிலேயே  ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாக சிபிசிஐடி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனால், சிவசங்கர் பாபா 2 நாள் போலீஸ் காவலிலேயே மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

சிபிசிஐடி போலீசார் நேற்று அவருடைய பள்ளிக்கு நேரடியாக அழைத்து சென்று  விசாரணை மேற்கொண்டுள்ளனர். அந்த விசாரணையின் போது, லேப்டாப், 4 சீடிக்கள் மற்றும் பென்ட்ரைவ் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் அவர் பல ஆண்டுகளாக  பயன்படுத்திய yahoo இ-மெயிலை சிபிசிஐடி போலீசார் முடக்கம் செய்துள்ளனர். அந்த இ-மெயில் பள்ளிக்கு சொந்தமான இ-மெயில் என்றும், அந்த இ-மெயிலை தான் அவர் பயன்படுத்தி வந்ததும் தெரியவந்துள்ளது. 

இந்த இ-மெயிலை முடக்கம் செய்த போலீசார், அதனை சைபர் ஆய்விற்கு உட்படுத்தி, அதனை ஆய்வு செய்யும் பணியில் சிபிசிஐடி போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்களிடம் ஆபாசமாக சாட் செய்த ஒரு ஸ்கிரீன் சாட்டும் கிடைத்துள்ளதாகவும் போலீசார்  தெரிவித்துள்ள நிலையில், இந்த வழக்கு தொடர்பான அடுத்த கட்ட விசாரணைக்கும் சிபிசிஐடி போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.