தமிழகத்தில் இன்று முதல் டீ கடைகள் செயல்பட அனுமதி!

  • தமிழகத்தில் வருகிற 21-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • அதன்படி இன்று முதல் தமிழகத்தில் டீக்கடைகள் இயங்குவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சில தளர்வுகள் உடன் தமிழகத்தில் அமலில் இருந்த ஊரடங்கு இன்றுடன் முடிவடைந்த நிலையில், மேலும் இந்த ஊரடங்கை ஜூன் 21-ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தளர்வுகளில்  டீ கடைகள் திறக்க அனுமதி கொடுக்கப்படாமல் இருந்தது. இதனால் பல்வேறு தரப்பினரும் தேநீர் கடைகளை திறப்பதற்காக கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் நாளை முதல் தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

ஆனால் தேனீர் கடைகளில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. தேனீர் வாங்க வரும் பொழுது மக்கள் வீட்டிலிருந்து பாத்திரங்களை கொண்டுவந்து பெற்று செல்லுமாறும், தேனீரை பிளாஸ்டிக் பை பார்சல்களில் வாங்குவதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தேனீர் கடைகளில் அருகே நின்று தேனீர் அருந்துவதற்கும் அனுமதி கொடுக்கப்படவில்லை.

author avatar
Rebekal