அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்..! எதிர்கட்சி துணைத் தலைவர், கொறடா பதவி யாருக்கு..?

அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்..! எதிர்கட்சி துணைத் தலைவர், கொறடா பதவி யாருக்கு..?

  • அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நண்பகல் 12:00 மணிக்கு நடைபெற உள்ளது.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கட்டம் வருகின்ற இன்று நண்பகல் 12:00 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழகத்தில், சழக ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ. பன்னீர்செல்வம் கழக இனை ஒருங்கிணைப்பாளர் திரு. எடப்பாடி K பழனிசாமி ஆகியோர் தலைமை நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில், கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அறிவிந்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியும், சமூக இடைவெளியைக் கடைபிடித்தும், முகக் கவசம் அணிந்தன், இன்னபிற தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும், MLA ID Card உடன் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டப் மட்டுமே நடைபெற இருப்பதால், கொரோனோ பெருந்தொற்றின் காரணமாக இன்றைய தினம் கழக நிர்வாகிகள் வருவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்றும் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் தவிர வேறு யாரையும் அனுமதிக்க இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர், கொறடாவை தேர்ந்தெடுப்பதற்காக இன்றைய அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
murugan
Join our channel google news Youtube