நாளை தமிழக பட்ஜெட் தாக்கல்!மக்களின் எதிர்பார்ப்புகள் என்னென்ன?

தமிழகச் சட்டமன்றத்தில் நாளை துணை முதலமைச்சர் மற்றும் நிதி அமைச்சர் பதவிகளை வகித்து வரும் ஓ.பன்னீர்செல்வம் 2017-2018 நிதி ஆண்டு வருகின்ற மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் 2018 மார்ச் 15-ம் தேதி  2018-2019 நிதி ஆண்டுக்கான தமிழ் நாடு பட்ஜெட்டினை தாக்கல் செய்ய இருக்கிறார்.

தமிழக பட்ஜெட் 2018-ஐ வியாழக்கிழமை காலை 10:30 மணியளவில் தாக்கல் செய்யப்படும் என்று மாநில அரசின் பத்திரிக்கை வெளியீட்டில் மார்ச் 7-ம் தேதி குறிப்பிட்டு இருந்தனர்.

முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்த பிறகு அதிமுக கட்சி இரண்டாகப் பிரிந்து இருந்த நிலையில் 2017-2018 நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டினை ஜெயகுமார் தாக்கல் செய்து இருந்தார். ஆனால் இப்போது ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் என இரு அதிமுக அணிகளும் இணைந்துள்ள நிலையில் மீண்டும் ஓ பன்னீர் செல்வம் 2018-2019 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டினை தாக்கல் செய்ய இருக்கிறார்.

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரி குறைக்கப்படுமா என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். சினிமா டிக்கெட் மீதான பொழுதுபோக்கு வரியைக் குறைக்க வேண்டும் என்று திரைப்படத் துறையினர் கூறி வருகின்றனர்.

மத்திய அரசு மற்றும் ஆர்பிஐ இருவரும் விவசாயக் கடன் தள்ளுபடிக்கு எதிராக உள்ள நிலையில் உத்திர பிரதேசம் போன்று சில மாநிலங்கள் விவசாயக் கடனை தள்ளுபடி செய்துள்ள நிலையில் தமிழக அரசு தள்ளுபடி செய்யுமா என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அதுமட்டும் இல்லாமல் பள்ளி கல்வித் துறைக்குப் புதிய திட்டங்கள், பொது மக்களுக்கு என்ன மாதிரியான புதிய திட்டங்கள் எல்லாம் அறிவிப்பு வெளிவரும் என்று பொருத்து இருந்து பார்ப்போம்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment