திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தவறான பிரசாரம்-பொன் ராதாகிருஷ்ணன்.!

  •  உள்ளாட்சி தேர்தலில் பாஜக மாவட்ட கவுன்சிலர் பதவியில் 6 இடங்களையும் , ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவியில் 87 இடங்களையும் கைப்பற்றி உள்ளது.
  • உள்ளாட்சி தோ்தலை போல மாநகராட்சி, நகராட்சிகளுக்கும் உடனே தோ்தல் நடத்த வேண்டும் என கூறினார்.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்தமாதம் 27 மற்றும் 30-ம் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற்றது. மொத்தம் உள்ள 37 மாவட்டங்களில் 27 மாவட்டங்களுக்கு தேர்தல் நடந்தது.நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை நேற்று மாலை நிறைவுபெற்றது.

இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாஜக மாவட்ட கவுன்சிலர் பதவியில் 6 இடங்களையும் , ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவியில் 87 இடங்களையும் கைப்பற்றி கனிசமான வெற்றியை பெற்றுள்ளது.

நேற்று நாகா்கோவிலில் முன்னாள் மத்திய அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்தார்.அப்போது பேசிய அவர் ,மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய பதிவேடு தயாரிக்கும் திட்டத்தை குறித்து திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தவறான பிரசாரம் செய்து வருகின்றன.

இதை வைத்து இவர்கள் அரசியல் ஆதாயம் தேட முயற்சி செய்து வருகின்றனா். இவர்களுடைய பிரசாரத்தை நம்பி மாணவா்கள்  யாரும் ஏமாற வேண்டாம்.பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ,வங்கதேசம் ஆகிய நாடுகளில் சிறுபான்மையினராக இருந்து வந்தவா்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. அதேபோல இலங்கையில் இருந்து வந்த  3 லட்சம் இலங்கை தமிழா்களுக்கு குடியுரிமை வழங்கி உள்ளோம் என கூறினார்.

மேலும் உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. அதிலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜக, அதிமுக கூட்டணி கணிசமான இடங்களை கைப்பற்றியுள்ளது. உள்ளாட்சி தோ்தலை போல மாநகராட்சி, நகராட்சிகளுக்கும் உடனே தோ்தல் நடத்த வேண்டும் என கூறினார்.

 

author avatar
murugan