மகாராஷ்டிர அரசு ஆய்வு!

ஆன்லைன் லாட்டரி  தொடங்குவது பற்றி மகாராஷ்டிரா அரசு தீவிர ஆய்வில் ஈடுபட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் லாட்டரி மூலம் அரசுக்கு ஆண்டுக்கு 132கோடி ரூபாய் வருமானம் வருகிறது. இதில் 125கோடி ரூபாய் பிற மாநில லாட்டரி மூலம் பெறப்படும் வரியாகும். அரசுக்குச் சொந்தமான லாட்டரி மூலம் 7கோடி ரூபாய் மட்டுமே வருமானம் வருகிறது.
இந்நிலையில் கேரள மாநிலத்தைப் போல் மகாராஷ்டிரத்திலும் ஆன்லைன் லாட்டரி தொடங்குவது பற்றி ஒரு குழு அமைத்து ஆய்வு செய்து வருவதாக அரசின் முதன்மைச் செயலாளர் விஜய் குமார் கவுதம் தெரிவித்துள்ளார்.
இந்த ஆன்லைன் லாட்டரி முறை வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து நடைமுறைக்கு வர உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கேரளத்தில் லாட்டரி மூலம் ஆண்டுக்கு ஆயிரத்து முந்நூறு கோடி ரூபாய் வருமானம் வருவதையும், வடகிழக்கு மாநிலங்கள் லாட்டரி மூலம் பெருமளவில் வருமானம் ஈட்டுவதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்  செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் …..

Leave a Comment