பாகிஸ்தான் படையின் அத்துமீறியத் தாக்குதலில் 11  பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தான் படைத் தாக்குதலில் கடந்த நான்கு நாட்களில் 11  பேர் உயிரிழப்பு எனத் தகவல் .
காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லைக்கு அப்பால் இருந்து கடந்த சில நாட்களாக தொடர்ந்து அத்துமீறித் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இரவு பகல் பாராமல் சிறிய ரக ராக்கெட் குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால், எல்லைக்கட்டுப்பாடு கோடு மற்றும் சர்வதேச எல்லைப்பகுதி கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி வருகின்றனர்.
Image result for jammu kashmir poonch attack
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள, ஜம்மு, கத்துவா, சம்பா, பூஞ்ச் மற்றும் ரஜவுரி மாவட்டங்களில் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதலுக்கு இந்தியப் படை வீரர்கள் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றனர். பாகிஸ்தான் படை தாக்குதலில் நேற்று வரை 4 ராணுவ வீரர்களும், 6 பொதுமக்களும் உயிரிழந்தனர்.
நேற்று நள்ளிரவு பூஞ்ச் மாவட்டம் மெந்தார் செக்டார் பகுதியில் பாகிஸ்தான் படையின் அத்துமீறிய தாக்குதலில், சந்தன்குமார் ராய் என்ற வீரர் படுகாயமடைந்தார். இதையடுத்து, ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சந்தன்குமார் ராய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதன்மூலம் கடந்த 4 நாட்களில் பாகிஸ்தான் படை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் படையின் தாக்குதலில் இதுவரை 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் ….

Leave a Comment