50 நாட்கள் கஷ்டப் படுங்கள்! ஐந்து தலைமுறைக்கு நன்றாக வாழ்வீர்கள்!

நம்மை எல்லாம் பாடாய் படுத்தி,
சொந்த பணத்தையே வங்கிகளில் இருந்து
எடுக்க முடியாத கஷ்டத்தை உருவாக்கி,
கடும் வெய்யிலில் கால் கடுக்க காத்துக் கிடைக்க வைத்து,
சம்பளம் கொடுக்க முடியாமலும், சம்பளம் பெற முடியாமலும்
சிறு தொழில் மற்றும் சிறு வியாபாரிகளை சிரமத்திற்கு உள்ளாக்கி,
ஒட்டு மொத்த பொருளாதாரத்தையே சிதைத்து சின்னாபின்னமாக்கி…
அட அட அட…
என்ன கொடுமை! அந்த 50 நாட்கள்!!
நமது பிரதமர் சொன்னார்.
“கறுப்புப் பண பேர்வழிகளை கலங்கடித்து, கதறடித்து,
கைப்பற்றவே இந்த திட்டம்”
“50 நாள் கஷ்டப் படுங்கள்.

ஐந்து தலைமுறைக்கு நன்றாக வாழ்வீர்கள்” என்றார்.
மோடி ஏதோ செய்வார் என்று மக்களும் ஒத்துழைத்தார்கள்.
தற்போது ரிசர்வ் வங்கி அறிக்கையை உற்று நோக்குங்கள்.
“நவம்பர் 8-ம் தேதி பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்டபோது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரூ.15,44,000 கோடி. தற்போது 15,28,000 கோடி ரூபாய் திரும்ப வந்துள்ளது.”
அதாவது, 99 சதம் திரும்ப வந்து விட்டதாம்.
இப்போது மக்களின் கேள்வி என்ன தெரியுமா?
நீ சொன்னாய் என்பதற்காக
இவ்வளவு துன்பங்களையும் ஏற்றுக் கொண்டோமடா பாவி!
நீ எதற்காக இதை செய்தாய்?
#கருப்பு_பணத்தை_கைப்பற்றவா?
#கருப்பு_பணத்தை_வெள்ளையாக்கவா?

author avatar
Castro Murugan

Leave a Comment