திருநெல்வேலி மாநகராட்சியில் துப்புரவு பனியாளர்களை மிரட்டி பணி செய்ய வைத்து மனித உரிமை மீறலில் ஈடுபட்ட அதிகாரிகள் முருகன் , முனியசாமி ஆகியோர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவிட வேண்டி ஜாதிய மதவாத ஆதிக்க எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியளரிடம் மனு அளிக்கப்பட்டது…

0
228

திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் துப்புரவு பணியில் ஈடுபடும் துப்புரவு பனியாளர்களுக்கு பாதுப்பு உபகரனங்கள் வழங்கபடுவதில்லை, பாதுகாப்பு உபகரனங்கள் இல்லாததால் கழிவு நீரோடைகளிலும் பாதாள சாக்கடைகளிலும் இறங்கி பனி செய்யும் போது மருந்து ஊசிகள் , உடைந்த கண்ணாடி துண்டுகள் போன்றவைகளால் காயம் ஏற்பட்டு பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.
துப்புரவு பனியாளர்கள் பாதுகாப்பு உபகரனங்கள் இல்லாமல் பனி செய்ய இயலாது என்று கூறினால் அவர்களை வேலையில் இருந்து தூக்கிடுவோம் என்று மேல் அதிகாரிகள் மிரட்டி பணி செய்ய வைக்கிறார்கள். மிரட்டல்களுக்கு பயந்து வேறு வழியின்றி பாதுகாப்பு உபகரனங்கள் இல்லாமல் வேலை செய்கிறார்கள், இதனால் பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது பல இடங்களில் உயிர் இழப்பும் ஏற்படுகின்றன.
துப்புரவு பனியாளர்களை மேல் அதிகாரிகள் மிரட்டுவது கூட ஜாதிய கண்னோட்டத்தோடு தான் நடைபெறுகிறது, கூறிப்பாக துப்புரவு பனியில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட மக்களே இருக்கிறார்கள். திருநெல்வேலி மாநகராட்சியில் துப்புரவு பனியாளர்களை மிரட்டி பணி செய்ய வைத்து மனித உரிமை மீறலில் ஈடுபட்ட அதிகாரிகள் முருகன் , முனியசாமி ஆகியோர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவிட வேன்டும், துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேன்டும்.

துப்புரவு பணியாளர்களை கழிவுநீரோடை , பாதாளச் சாக்கடையில் இறக்க கூடாது ,மனித கழிவுகளை அகற்ற வைக்க கூடாது என்றும் மறுவாழ்வு அளித்திட மாற்று ஏற்பாடு செய்திட வேன்டும் என்று 2013ல் சட்டம் இயற்றப்பட்டுள்ளது ஆனால் இது வரையில் அரசு சட்டத்தை நடைமுறைபடுத்த முன் வரவில்லை எனவே திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் உடனடியாக 2013 துப்புரவு பனியாளர்கள் மறுவாழ்வு சட்டத்தை நடைமுறைபடுத்த வேன்டும்.

கோரிக்கைகளை முன்வைத்து ஜாதிய மதவாத ஆதிக்க எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியளரிடம் மனு அளிக்கப்பட்டது , மாவட்ட ஆட்சியர் அவர்கள் நடந்த சம்பவங்களுக்கு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் துப்புரவு பனியாளர்கள் மறுவாழ்வுக்கு மாற்று ஏறபாடு செய்ய அமைப்புகள் உள்ளடக்க தனி கமிட்டி அமைக்கப்படும் , துப்புரவு பனிக்கு இயந்திர பயன்பாடு ஏற்பாடு செய்யப்படும் ன்று உறுதியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here