ரஞ்சி புகழ் நித்தி சுவாமிகள் மதுரை ஆதின மடத்துக்குள் நுழைய கூடாது..,வழக்கறிஞர்கள், தனியார் அமைப்புகள் காவல் நிலையத்தில் புகார்

மதுரை ஆதின மடத்துக்குள் நித்யானந்தா நுழைய போலீசார் அனுமதிக்கக் கூடாது என்றும் இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரும் என்றும் கூறி  வழக்கறிஞர்கள், தனியார் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்டோர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை தெரிவித்துள்ளனர். மதுரை இளைய ஆதீனமாக நித்யானந்தாவை, ஆதீனம் அருணகிரிநாதர் நியமித்தபோது அதனை இந்து மக்கள் கட்சியினர் எதிர்த்து போராட்டம் நடத்தினர். பாலியல் வழக்குகள் உள்ள நித்யானந்தாவாலும், அவர்களின் பெண் சீடர்களாலும், மதுரை ஆதீனத்தின் புனிதம் களங்கமடைந்ததாக அவர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர். இதனை … Read more

ஹிந்தியில் சில்க் சிமிதாவாக நடித்த வித்யாபாலன் விபத்தில் சிக்கினரா…? என்ன ஆச்சோ…

பாலிவுட் திரையுலகில் நடிகை வித்தியா பாலனுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். கோலிவுட்டில் எப்படி நயன்தாரா மிகச்  சிறப்பான வகையில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்தெடுத்து நடித்து வருகிறாரோ அதே போல் பாலிவுட்டில் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளைத் தேர்தெடுத்து நடித்து வருகிறார் வித்யா பாலன். இந்நிலையில் வித்யா பாலன் முக்கியமான ஒரு சந்திப்பிற்காக மும்பையில் தன்னுடைய காரில் பயணம் செய்துள்ளார். அப்போது எதிரே வந்த கார் திடீர் என  கட்டுப்பாட்டை இழந்து, வித்யா பாலன் வந்த … Read more

பேர்ஸ்டோவ் சதம் விளாசல்: கோப்பை வென்றது இங்கிலாந்து

சவுத்தாம்ப்டன்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஐந்தாவது ஒரு நாள் போட்டியில் பேர்ஸ்டோவ் சதம் விளாச, இங்கிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்று கோப்பை கைப்பற்றியது. இங்கிலாந்து சென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றது. முதல் நான்கு போட்டிகள் முடிவில், இங்கிலாந்து ஏற்கனவே 3-0 என தொடரை வென்றிருந்தது. கடைசி மற்றும் ஐந்தாவது போட்டி சவுத்தாம்ப்டனில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து கேப்டன் மார்கன் ‘பவுலிங்’ தேர்வு செய்தார். … Read more

இயக்குநர் சீனுராமசாமியுடன் கைகோர்க்கும் அதர்வா முரளி

‘தர்மதுரை’ பட வெற்றியை தொடர்ந்து இயக்குநர் சீனுராமசாமியும், விஜய்சேதுபதியும் மீண்டும் ஒரு படத்தில் இணையவிருக்கிறார்கள் என்றும் இந்த படத்திற்கு ‘மாமனிதன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது என்று சில மாதங்களுக்கு முன் செய்திகள் வெளியாகின. ஆனால் மாமனிதன் படம் துவங்குவதற்கான அறிகுறிகள் தெரியவில்லை.விஜய்சேதுபதி கைவசம் இப்போது நிறைய படங்களில் நடித்து வருவதால ‘மாமனிதன்’ படத்திற்கு உடனடியாக கால்ஷீட் கொடுக்கவில்லையாம். எனவே இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க காலதாமதம் ஆகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதுவரை சும்மா இருக்க வேண்டாம் என்பதற்காக மாமனிதன் படத்துக்கு … Read more

நான் நினைத்திருந்தால் அருண் ஜெட்லிக்கு பதவி கிடைக்காமல் செய்திருக்க முடியும் போட்டு தாக்கும் யஸ்வந்த் சின்ஹா

முன்னாள் நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தற்போதைய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை கடுமையாக தாக்கி பேசியுள்ளார். பிரதமர் மோடியும் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியும் இந்திய பொருளாதாரத்தை சிதைத்து விட்டார்கள் என்று பாஜகவின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா சாமிபத்தில் பேசியிருந்தார்.  முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்த சின்ஹா ஆளும் பாஜக அரசை இவ்வாறு விமர்சித்தது சர்ச்சையைக் கிளப்பியது.  இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அருண் ஜெட்லி பின்வருமாறு பேசியுள்ளார். சின்ஹா … Read more

மாணவி அனிதா குடும்பத்துக்கு ரூ. 15 லட்சம் வழங்கப்படும்: டிடிவி தினகரன்

மாணவி அனிதா குடும்பத்துக்கு ரூ. 15 லட்சம் வழங்கப்படும் என்று அதிமுகவின் அம்மா அணியின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம். மாணவி அனிதா குடும்பத்துக்கு ரூ. 15 லட்சம் வழங்கப்படும். ஆதரவு எம்எல்ஏக்களின் ஒருமாத ஊதியம், கட்சி நிதி ரூ. 5 லட்சம் சேர்த்து ரூ. 15 லட்சம் வழங்கப்படும். அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா, நீட் தேர்வினால் எம்.பி.பி.எஸ். … Read more

பக்கத்து வீட்டு சிறுமியை கற்பழித்த 25 வயது வாலிபர்: 7 ஆண்டு சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்!

மும்பையை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் கடந்த 2014-ஆம் ஆண்டு தனது வீட்டுக்கு அருகில் உள்ள 25 வயது வாலிபனால் கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் அந்த வாலிபனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மும்பையை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் தனது வீட்டுக்கு வெளியே விளையாட சென்றார். அதன் பிறகு வெகுநேரமாகியும் அந்த சிறுமி வீடு திரும்பாததால் பெற்றோர்கள் பல இடங்களில் தேடி … Read more

தேமுதிக நிரந்தர பொதுச் செயலராக விஜயகாந்த் தேர்வு; துணைப் பொதுச் செயலராகிறார் சுதீஷ்

காரைக்குடி : தேமுதிகவின் நிரந்தரப் பொதுச் செயலராக, கட்சியின் தலைவர் விஜயகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணைப் பொதுச் செயலராக, எல்.கே. சுதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார். காரைக்குடியில் நடைபெறும் தேமுதிகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தில் மிக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, தேமுதிக தலைவராக இருக்கும் விஜயகாந்த், பொதுச் செயலராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது குறித்து செயற்குழு, பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேமுதிகவில் இதுவரை பொதுச் செயலர் பதவி இல்லை. தற்போது புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கட்சியில் எத்தகைய … Read more

ஓரே நாளில் 400 போலீஸார் பணியிட மாறுதல்: புதுவை டிஜிபி அதிரடி

புதுச்சேரி மாநிலத்தில் ஒரே நாளில் 400 போலீஸாரை பணியிடமாற்றம் செய்து டிஜிபி சுனில்குமார் கௌதம் உத்தரவிட்டார். புதுச்சேரி சட்டம் ஒழுங்கு குறித்த ஆலோசனை கூட்டம் முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் டிஜிபி சுனில்குமார் கெளதம் மற்றும் காவல் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். பண்டிகைக்காலங்களில் போலீசார் கடைகளில் மாமூல் வாங்குவது குறித்து பல புகார்கள் வந்தது. ஏற்கனவே போலீசார் இதுபோன்று நடவடிக்கையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி எச்சரித்திருந்தார். இதனைத்தடுக்கும் வகையில் புதுச்சேரி … Read more

ஆளுநராக பான்வாரிலால் புரோகித் புதன் அன்று பதவியேற்பு?

தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரிலால் புரோகித், வரும் புதன்கிழமை அன்று பதவியேற்பார் என தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோகித் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக ஆளுநராக இருந்த ரோசய்யாவின் பதவிகாலம் முடிந்த பிறகு, மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவ், தமிழக பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார். வித்யாசாகர் ராவ், கடந்த ஒரு வருடகாலமாக தமிழக பொறுப்பு ஆளுநராக இருந்து வந்தார். இந்த நிலையில், தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோகித்தை மத்திய அரசு நியமனம் … Read more