தமிழகத்திற்கு வந்தடைந்தது 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள்!

தமிழகத்திற்கு மேலும் 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் சென்னை வந்தடைந்தன என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா இரண்டாவது அலை அச்சுறுத்தல் காரணமாக தடுப்பூசிகள் மத்திய அரசிடம் இருந்து தொடர்ச்சியாக வரவைக்கப்ட்டு வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட தடுப்பூசி திட்டம் முன்னுரிமை அடிப்படையில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகத்திற்கு மேலும் 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் சென்னை வந்தடைந்தன.

தமிழகத்தில் இதுவரை 50 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனிடையே 20 லட்சம் தடுப்பூசிகளை விரைந்து வழங்குமாறு மத்திய அரசிடம், தமிழக அரசு கோரிக்கை விடுத்த நிலையில், மேலும் 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து புனேவில் இருந்து வந்தடைந்தன என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்