ICC : 13 வருடங்களுக்கு முன்பு இதே நாள் ! மறக்குமா நெஞ்சம் ..?

ICC : 13 வருடங்கள் முன்பு இதே நாளான ஏப்ரல்- 2 ல் அன்று தோனி தலைமையில் தான் இந்தியா அணி தனது 2-வது ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்றது.

கடந்த 2011-ம் ஆண்டு இதே நாளான ஏப்ரல்-2 அன்று 50 ஓவர் உலககோப்பை இறுதி போட்டியில் இலங்கை அணியை வெற்றி பெற்று 2-வது முறை உலகக்கோப்பையை வென்றது இந்தியா அணி. கிரிக்கெட் உலகக்கோப்பை என்றாலே நமக்கெல்லாம் ஒரு தனி எதிர்ப்பார்ப்பாகவே இருக்கும் அப்படி தான் 2011 ம் ஆண்டு, 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் தொடங்கப்பட்டது.

இந்திய அணியின் கேப்டனாக தோனி தலைமையில் 2007 ம் ஆண்டு முதல் 20 ஓவர் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி. அதை தொடர்ந்து 4 வருடம் கடந்து 2011-ல் அடுத்த 50 ஓவர் உலகக்கோப்பையையும் இந்திய அணி தட்டி தூக்கியது. இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மறக்க முடியாத ஒரு தருணமாக அமைந்த தினம் தான் ஏப்ரல்-2. 2011 ம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலகக்கோப்பை தொடரின் லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவுடன் மட்டுமே தோல்வியை தழுவிய இந்திய அணி, இங்கிலாந்து உடனான போட்டியை ட்ரா செய்தது.

அதன் பிறகு கால்-இறுதி சுற்றில் ஆஸ்திரேலியா அணியை சந்தித்த இந்தியா அணி முதல் முறையாக ஆஸ்திரேலியா அணியை உலகக்கோப்பை நாக்-அவுட் சுற்றில் வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து அரை இறுதியில் பாகிஸ்தானை சந்தித்த இந்தியா அணி ஒரு அபார வெற்றியை பெற்று உலகக்கோப்பை தொடரில் 3-வது முறையாக இறுதி சுற்றுக்குள் நுழைந்தது. மேலும், லீக் தொடரில் தோல்வியே காணாத வலிமையான இலங்கை அணியை இறுதி போட்டியில் சந்திக்க நேர்ந்தது.

முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இலங்கை அணி 274 ரன்களை இலக்காக இந்தியா அணிக்கு நிர்ணையித்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய இந்தியா அணி முதலில் சரிவை கண்டது. சச்சின், சேவாக், விராட் போன்ற ஜாம்பவான்கள் அவுட் ஆகி வெளியேற களத்தில் கம்பிரும், தோனியும் நின்று போராடினார்கள். இறுதியில், 11 பந்துகளில் 4 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தோனி சிக்ஸ் அடித்து அந்த போட்டியை முடித்து வைப்பார். இதன் மூலம் இந்திய அணி 28 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பையை வென்றது.

தோனி அடித்த அந்த ஃபினிஷிங் ஷாட்டை நம்மால் மறக்க முடியாது என்றே கூறலாம்.  கிரிக்கெட் ஜாம்பவான்களான சச்சின், சேவாக், போன்ற அப்போது இருந்து மூத்த கிரிக்கெட் வீரர்களுக்கு அது ஒரு சிறந்த பேர்வெல் (Fairwell) ஆக அமைந்தது. இன்னும் எத்தனை கோப்பைகளை இந்திய அணி வென்றாலும், எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் இந்த 2011 – ல் வென்ற உலகக்கோப்பையை நம்மால் மறக்கவே முடியாது.

author avatar
அகில் R
நான் அகில் R, மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் பட்டதாரியான நான் கடந்த 6 மாத காலமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். விளையாட்டு, சினிமா, தொழில்நுட்பம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.