மேற்கு வங்காளத்தில் 96 சதவீத குழந்தைகள் மருத்துவமனைகளில் பிறப்பு…முதல்வர் மம்தா பானர்ஜி பெருமிதம்…!!

மேற்கு வங்காளத்தில் மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 96 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது என முதல் மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
உலக குறைபிரசவ தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.  ஒவ்வொரு வருடமும், குறிப்பிட்ட காலத்திற்கு முன் பிறக்கும் குழந்தைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மற்றும் அவர்களின் குடும்பத்தினை கவனத்தில் கொண்டும் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்த நிலையில், மேற்கு வங்காளத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய முதல் மந்திரி மம்தா பானர்ஜி, கர்ப்பிணி பெண்களின் நலனுக்காக எனது அரசு கடுமையாக பணியாற்றி வருகிறது என கூறினார்.
இதுபற்றி டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், இன்று உலக குறைபிரசவ தினம்.  கர்ப்பிணிகள் மற்றும் புதிய தாய்மார்களின் நலனுக்காக மாநில அரசு ஓய்வின்றி உழைத்து வருகிறது.

நகரங்களில் இருந்து தொலைதூரத்தில் அமைந்த பகுதிகளில் உள்ள கர்ப்பிணிகளுக்காக எங்களுடைய அரசு காத்திருப்பு மையங்களை அமைத்து வருகிறது.  கடந்த 7 வருடங்களில், மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 65 சதவீதத்தில் இருந்து 96 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

dinasuvadu.com 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment