நிதி ஆயோக்கின் பரிந்துரைப்படி ஏர் இந்தியா பங்குகளை விலக்கி கொள்ள அரசு முடிவு

தொடர் நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்று விட்டு நஷ்டத்திலிருந்து வெளியேறுமாறு நிதி ஆயோக் தெரிவித்துள்ளது. அதன்படி தொடர் நஷ்டத்தில் இயங்கும் ஏர் இந்தியாவை விற்பனை செய்துவிட்டு தொடர் நஷ்டத்திலிருந்து வெளியேற நிதி ஆயாக் பரிந்துரைத்துள்ளது.
ஏர் இந்தியா நிறுவனம் கடன் சுமை அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு அரசு தொடர்ந்து நிதி உதவி அளிப்பது சரியான நடவடிக்கையாக இருக்காது எனவும் மக்களின் வரிப்பணம் ஏர் இந்தியா போன்ற நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை சீரமைக்க பயன்படுத்துவது சரியான நடவடிக்கையாக இருக்காது என்று நிதி ஆயோக் கூறியுள்ளது.
நடப்பு ஆண்டில் ஏர் இந்தியா நஷ்டம் ரூ. 3,579 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டு இது ரூ. 3,643 கோடியாக இருந்தது.  ஏர் இந்தியாவின் செயல்பாட்டு லாபம் ரூ 531 கோடியாக இருக்கும் என்று தெரிவித்தார். முந்தின நிதி ஆண்டில் (2016-17) நிறுவனத்தின் செயல்பாட்டு லாபம் ரூ.215 கோடியாக இருந்தது. கடந்த வருடம் ஜூன் 28-ம் தேதி கூடிய பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு கூடியதில், ஏர் இந்தியா நிறுவன பங்குகளை விலக்கிக் கொள்ளுமாறு முடிவு செய்யப்பட்டுள்ளது.
source : dinasuvadu.com

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment