திமுகவிற்காக பாஜக தலைவர் அமித் ஷா சென்னை வருகை …!நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியுடன் போட்டி…! பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பரபரப்பு தகவல்

நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா  கருத்து தெரிவித்துள்ளார்.
Image result for amit shah stalin
திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி காலமானார்.மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் புகழ் வணக்கக் கூட்டம் ஆகஸ்ட் 17, 19, 25, 26, 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று திமுக தலைமை அறிவித்தது.
 
திமுக தலைமை இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில்,திருச்சியில் ஆகஸ்ட் 17இல் கருத்துரிமைக் காத்தவர் கலைஞர் என்ற தலைப்பில் கூட்டம் நடைபெறுகிறது. ஆகஸ்ட் 19ஆம் தேதி மதுரையிலும், ஆகஸ்ட் 25ஆம் தேதி கோவையிலும்,ஆகஸ்ட் 26ஆம் தேதி திருநெல்வேலியிலும்,ஆகஸ்ட் 30ஆம் தேதி சென்னையிலும் கூட்டம் நடைபெறுகிறது என்று அறிவிப்பு வெளியிட்டது.
ஆகஸ்டு 30 சென்னையில் நடைபெறும் கலைஞர் நினைவேந்தல் கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்கிறார்.திமுக நினைவேந்தல் நிகழ்ச்சியில் தேசிய கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
Related image
ஆனால் பாஜக தலைவர் அமித் ஷாவின் இந்த வருகையில் திமுகவில் சலசலப்பு ஏற்படுள்ளது.அதேபோல் அதன் கூட்டணி கட்சியுமான காங்கிரசும் கலக்கத்தில் உள்ளது.
இந்நிலையில் நினைவேந்தல் கூட்டத்தில்  அமித்ஷா  கலந்து கொள்வது குறித்து பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா  கருத்து தெரிவித்துள்ளார்.
Image result for amit shah stalin
அவர் கூறுகையில், கருணாநிதி நினைவேந்தலில் அமித்ஷா பங்கேற்பது தொடர்பாக, இதுவரை தமிழக பாஜக தலைமைக்கு எந்த அதிகாரப்பூர்வமான தகவலும் வரவில்லை .மேலும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி அமைத்து தான் போட்டியிடும், ஆனால் எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பதை இப்போதைக்கு கூற முடியாது என்று தெரிவித்துள்ளார்.
DINASUVADU

Leave a Comment