தல பாடலை தவறாக சொன்ன பிரபல சீரியல் நடிகை! கடுப்பான சக நடிகர்கள்..!

அஜித்திற்கு அடுத்ததாக ஆரம்பிக்க இருக்கும் விசுவாசம் படத்தை எதிர்பார்த்திருக்கிறார்கள் சினிமாத்துறையினர். அவருக்கு எவ்வளவு பெரிய ரசிகர்கள் இருக்கிறார்கள் என தியேட்டர்களில் ஓப்பனிங் டே சொல்லும்.

சமூகவலைதளத்தில் அதற்கும் மேல். இப்போதெல்லாம் விழாக்களோ, நிகழ்ச்சிகளோ, நேர்காணல்களோ ஒரு சில பிரபலங்கள் தவறாது அஜித்தின் பெயர் குறிப்பிடுவார்கள்.

பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் திவ்யதர்ஷினி தொகுத்து வழங்கும் எங்கிட்ட மோதாதே நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் ராஜா ராணி சீரியல் பிரபலங்கள் கலந்துகொள்கிறார்கள்.

இதில் நடிகை ஸ்ரீதேவிக்கு காதில் ஹெட் செட் போடப்பட்டு வெளியில் இருக்கும் சத்தம் அவருக்கு கேட்காதபடி பாடல் ஒலிபரப்பப்பட்டது. உடன் இருக்கும் போட்டியாளர்களுக்கு ஸ்பீக்கரில் வேறு பாடலை ஒலிபரப்ப அவர்கள் அந்த பாடலுக்கு நடனம் ஆடுவார்கள்.

அவர்களின் ஆட்டத்தை வைத்து என்ன பாடல் என ஹெட் செட் போட்டிருப்பவர் கண்டுபிடிக்க வேண்டும். அப்போது வேதாளம் படத்திலிருந்து ஆலுமா லோலுமா பாடலுக்கு அவர்கள் ஆட, என்னெவென கண்டுபிடிக்க முடியாமல் தவறாக சொல்லிவிட்டார் ஸ்ரீதேவி.

இதனால் உடன் பங்கேற்ற ஆல்யா மானசா, சஞ்சீவ். மற்றும் இன்னொரு நடிகர் என பலரும் கடுப்பாகிவிட்டார்கள்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment