சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி …!ஏக்கத்தை போக்க நாளை வெளியாகிறது 2.0 திரைப்படத்தின் டீசர்…!

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த 2.0 திரைப்படத்தின் டீசர் நாளை காலை 9 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் இதுவரை நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகி உள்ள படம், ‘2.O.’  கடந்த 2010-ல் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகி உள்ளது. இதில் ரஜினிகாந்த் ஜோடியாக எமிஜாக்சனும் வில்லனாக இந்தி நடிகர் அக்‌ஷய்குமாரும் நடித்துள்ளனர்.
Image result for 2.0 டீசர்
இதன் படப்பிடிப்பு முடிந்து கடந்த தீபாவளிக்கே படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் திரையிட முடியவில்லை. கிராபிக்ஸ் வேலைகள் திட்டமிட்டபடி நடந்து கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் ரஜினி நடித்த 2.0 திரைப்படத்தின் டீசர் நாளை காலை 9 மணிக்கு வெளியிடப்படும் என்று இயக்குனர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Leave a Comment