சாஹோ படத்தின் சண்டை காட்சிகள் படமாக்க இத்தனை கார்கள் நாசமா..!

பாகுபலி என்ற ஒரே படம் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் நடிகர் பிரபாஸ். அப்படத்தை தொடர்ந்து அவர் சாஹோ என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

சுஜீத் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது துபாயில் வேகமாக நடந்து வருகிறது. படத்தில் இடம்பெறும் சண்டை காட்சி பற்றிய ஒரு விவரம் வெளியாக ரசிகர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர்.

அதாவது 300 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்தின் சண்டை காட்சிகள் நிஜமானதாக இருக்க வேண்டும் என்பதற்காக படக்குழு அதிக வேலைகள் செய்து வருகிறார்களாம். அதோடு இதுவரை 37 கார்களையும் 5 டிரக்களையும் நாசமாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment