கற்பனைக்கதைக்கே இவ்வளவு ரோஷம் வருதே?

காவி வேஷத்தில் மாநிலத்திற்கு ஒரு மதகுரு பெண்களுடன் சரசமாடுவதை ஏன் கண்டு கொதிக்கவில்லை?ஒருவேளை அதை வீடியோவில் பார்த்து ரகசியமாக ரசிக்கிறீர்களோ?இன்று நித்தியானந்தா நடிகையுடன் சரசமாடியது உண்மையான வீடியோ என உச்சநீதிமன்றமே சொல்லிவிட்டது.எங்கே போனது உங்கள் காவி மானம்,ரோஷம் எல்லாம்?

மத வேறுபாடுகளைத் தாண்டிய மக்கள் நல்லிணக்கக் கருத்தை ஒரு புதிய வடிவில் கூறிய இந்தித் திரைப்படமாகிய ‘பி.கே.’ முதல், ஜி.எஸ்.டி. வரி உள்ளிட்ட மத்திய அரசின் நடவடிக்கைகளை விமர்சித்த தமிழ்த் திரைப்படமான ‘மெர்சல்’ வரையில் மதவெறி சக்திகளின் தாக்குதல் பட்டியல் நீள்கிறது. அந்தப் பட்டியலை முடித்துக்கொள்ளப் போவதில்லை என்பதன் வெளிப்பாடாகத் தற்போது ‘பத்மாவதி’ என்ற இந்திப் படத்தைத் திரையரங்குகளுக்கே வர விடாமல் தடுக்கும் கலவரங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அதன் முன்னோட்டக் காட்சி திரையிடப்பட்ட ஒரு திரையரங்கிற்குத் தீவைக்கப்பட்டது. மற்றொரு இடத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது துப்பாக்கி வெடித்திருக்கிறது. ராஜஸ்தானின் சித்தூர் கோட்டைக்கு சுற்றுலாப் பயணிகள் வரவேண்டாம் என்று அறிவிக்கிற அளவுக்கு நிலைமை மோசமாகியிருக்கிறது.

தலைநகர் தில்லி உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் இப்படிப்பட்ட கலவரங்கள் பரவியிருக்கின்றன.பத்மாவதி:உண்மைக் கதையா?இத்தனைக்கும் பத்மாவதி கதை முற்றிலும் வரலாற்றுப்பூர்வமானது அல்ல. பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு கற்பனைகள் பத்மாவதி என்ற கதாபாத்திரத்தை வைத்துப் புனையப்பட்டு வந்திருப்பதை வரலாற்றாய்வாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். 21ம் நூற்றாண்டிலும் புதிய கற்பனைகளோடு அந்தக் கதை சொல்லப்படுவதில் எந்தத் தவறுமில்லை. ஆனால், மக்களின் நம்பிக்கையை மதவெறியாகவும் சாதிய வன்மமாகவும் மாற்ற முயல்கிற கும்பல்கள், இது முற்றிலும் உண்மைக்கதை என்றும், திரைப்படத்தில் அந்த உண்மை திரிக்கப்பட்டிருப்பதாகவும், தன் கவுரவத்தைக் காத்துக்கொள்ளத் தீக்குளித்த அரசி பத்மாவதியை இழிவுபடுத்துவதாகவும் ராஜ்புத் கர்ணி சேனா, அகில பாரத சத்திரிய மகாசபா போன்ற அமைப்புகள் பிரச்சனை கிளப்புகின்றன.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment