கமல் உங்கள் அரசியலில் போட்டியாளரா…??தன்னுடைய ஸ்டைலில் பளீர் பதில்..!!

நடிகர் ரஜினிகாந்த் சென்ற ஆண்டு டிசம்பர் மாதத்தில் தன்னுடைய அரசியல் பயணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் .
இதன் முதல் நகர்வாக நடிகர் ரஜினி தனது ரசிகர் மன்றங்களை, மக்கள் மன்றமாக மாற்றி அதற்கான நிர்வாகிகளையும் நியமித்தார்.அறிவித்து ஓராண்டு ஆகிய நிலையிலும் தற்போது வரை கட்சியின் பெயரை அறிவிக்கவில்லை நடிகர் ரஜினிகாந்த் ஆனால் தனது அரசியல் ரீதியான கருத்துகளை செய்தியாளர் சந்திப்புகளில் வெளிப்படுத்தி வருகிறார் .
இந்தே நிலையில் மற்றொரு உச்சநட்சத்திரமான நடிகர் கமல்ஹாசன் அரசியல் களமிரங்குகிறேன் என்று அறிவித்ததோடு மட்டுமல்லாமல் அதே வேகத்தில் மக்கள் நீதி மய்யம் என்கிற கட்சியையும் தொடங்கி அரசியல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.இந்நிலையில் ரஜினி அரசியல் கட்சி தொடங்குவதில் தாமதம்காட்டி வருகிறார் என்று விமர்சனங்கள் முன்வைக்கபட்டு வரும் வேளைவில் தனது போயஸ் தோட்ட இல்லத்தில் பிரபல தனியார் செய்தி சேனலுக்கு நடிகர் ரஜினி பேட்டியளித்துள்ளார்.
Related image
அதில் பல கேள்விகள் கேட்கப்பட்டது .அதில் அரசியலில் நடிகரும் ,மநீமையத்தின் த்லைவருமான கமல் உங்களுக்கு போட்டியாளரா என்ற கேள்வி ரஜினி முன்வைக்கப்பட்டது.
கேள்விக்கு பதிலளித்த நடிகர் ரஜினிகாந்த் நான் அரசியலில் கமலை எனக்கு போட்டியாளராக கருதவில்லை எனக்கு அவர் சக நடிகர் மற்றும் நல்ல நண்பர்,என்று தெரிவித்தார்.மேலும் பேசிய ரஜினி அரசியலில் நுழைந்தால் அதில் நான் நானாக இருப்பேன். அரசியலில் ஒரு மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்பதே என்னுடைய  விருப்பம்.இப்பொழுது எனக்கு 67 வயதாகிறது இந்த வயதில் ஒருவர் அரசியலில் நுழைவது எளிதல்ல தற்போது தமிழகத்திற்கு தேவை நல்ல தலைமை. தலைமைக்கான வெற்றிடம் அங்கு இருக்கிறது. மக்களிடம் இருந்து வாக்குகளை மட்டும்  வாங்கி கொள்வதை விட அவர்களின் தேவை எது என்பதை தெளிவுபடுத்த வேண்டும். மேலும் அரசியல் ஒரு ஆபத்தான விளையாட்டு என்பதாலே அதனை கவனமாக கையாள வேண்டும். இதில் நேரம் மிகவும் முக்கியம் என்று கூறியுள்ளார்.

author avatar
kavitha

Leave a Comment