உதகையில் நாளை 122 வது மலர் கண்காட்சியை துவக்கி வைக்கிறார் முதல்வர் பழனிசாமி

நீலகிரி மாவட்டம் உதகையில் 122 வது மலர் கண்காட்சிக்காக தாவரவியல் பூங்கா தயாராகி வருகிறது. , காய்கறி கண்காட்சி, வாசனை பொருட்கள் கண்காட்சி மற்றும் ரோஜா கண்காட்சி ஆகியவை முடிந்துள்ள நிலையில், உதகையின் மணி மகுடமாகத் திகழும் தாவரவியல் பூங்காவில் 122வது மலர் கண்காட்சி நாளை தொடங்குகிறது.Related image

1 லட்சம் மலர்களைக் கொண்டு மேட்டூர் அணை, 3500 மலர்களைக் கொண்டு பார்பி டால், 300 கிலோ வாசனை திரவிய பொருட்களைக் கொண்டு வள்ளுவர் கோட்டம் போன்றவற்றின் மாதிரிகளை அமைக்கும் பணியில் பூங்கா ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நாளைத் தொடங்கும் இந்தக் கண்காட்சி 5 நாட்கள் நடைபெறும். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் கண்காட்சியை துவக்கி வைக்கிறார்

author avatar
Dinasuvadu desk

Leave a Comment