இமயமலையில் 4 சிகரங்களுக்கு முன்னாள் பிரதமர் பெயர்…!!

இமயமலையில் கங்கோத்திரி பனிமுகடு பகுதியில் உள்ள 4 சிகரங்களுக்கு மறைந்த முன்னாள் பிரதமர் ன் பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

இமயமலையில் கங்கோத்திரி பனிமுகடு பகுதியில் 6,557 மீட்டர், 6,566 மீட்டர், 6,160 மீட்டர், 6,100 மீட்டர் உயரங்களில் உள்ள 4 சிகரங்களுக்கு மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் பெயர் சூட்டப்பட்டு உள்ளது. அந்த சிகரங்களுக்கு முறையே அடல்-1, அடல்-2, அடல்-3, அடல்-4 என்று பெயர்கள் சூட்டப்பட்டு இருக்கிறது.இந்த தகவலை, சமீபத்தில் அந்த சிகரங்களுக்கு சென்று வந்த மலை ஏறும் குழுவுக்கு தலைவராக இருந்த நேரு மலை ஏறும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வரான கர்னல் அமித் பிஷித் நேற்று தெரிவித்தார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment