இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘சர்வம் தாளமயம்’ படத்தின் ரிலீஸ் அப்டேட்!

தமிழ்சினிமாவில் தற்போது மிகவும் பிசியான கதாநாயகனாகிவிட்டார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார். இவர் நடிப்பில் அடங்காதே, 100% காதல், சர்வம் தாளமயம், ஜெயில், ஐயங்காரன் என படங்கள் ரிலீஸூக்கு வரிசைகட்டி நிற்கின்றன. 

இதில் சர்வம் தாளமயம் திரைப்படத்தை ராஜீவ் மேனன் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ஓர் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த இளைஞன் கர்நாடக இசையான மிருதங்கம் கறாறுக்கொள்ள அவன் படும் கஷ்டத்தை படமாக்கியுள்ளனர். இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நன்றாக நடித்துள்ளதாக படத்தை பார்த்த திரைபிரபலங்கள் பாராட்டியுள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி டிசம்பர் 28 என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

source : cinebar.in

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment