ராமர் கோயில் விவகாரம்….காங்கிரஸ் எந்தவிதத்திலும் காரணமில்லை….முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல்…!!

ராமர் கோயில் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தள்ளிப்போக காங்கிரஸ் எந்தவிதத்திலும் காரணமில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல் கூறியிருக்கிறார்.

பிரதமரின் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ள அவர், மன் கி பாத்தில் பிரதமர் உண்மைக்கு முரணானவற்றை தெரிவிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். அயோத்தி வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்திற்கு முதன்மையான விஷயம் அல்ல என தலைமை நீதிபதி தெரிவித்திருந்ததை அவர் சுட்டிக்காட்டினார். அவருக்கு எதிராகப் புகார் கூறும் தைரியம் பிரதமருக்கு கிடையாது எனவும், அரசியல் லாபத்திற்காக காங்கிரஸை குறை கூறும் நோக்கம் நிறைவேறாது என்றும் கபில் சிபல் கூறினார்.
இதன்மூலம், 2019 மக்களவை தேர்தலில் ராமர் கோயில் விவகாரம் தேசிய அரசியலில் மீண்டும் பேசுபொருளாக மாறத் தொடங்கியுள்ளது.

dinasuvadu.com 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here