விஜய் ஒரு புத்தகம் போன்றவர்! அவருகிட்ட இருந்து கற்றுக்கொள்ளுங்கள்!

  • விஜய் ஒரு புத்தகம் போன்றவர்.
  • அவருகிட்ட இருந்து கற்றுக்கொள்ளுங்கள்.

நடிகை அமலாப்பால் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ஆடை. இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில், கலவையான விமர்சனங்களை பெற்று, நல்ல வசூல் செய்தது. தற்போது இவரது நடிப்பில் உருவாக்கி வரும் திரைப்படம், ‘அதோ அந்த பறவை போல்’ என்ற திரைப்படம்.

இந்நிலையில், இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ‘என் பிடித்தமான நடிகர்களில் ஒருவர் விஜய். நான் 10 வருடம் சினிமா துறையில் இருக்கிறேன். அதுவே மிகவும் கடினமாக இருக்கிறது. இது சாதாரண விஷயம் அல்ல. போராட்டங்கள் அதிகம். பல விஷயங்களை இழக்க நேர்கிறது.

ஆனால் விஜய் இத்தனை வருடங்கள் தொடர்ந்து ஓயாமல் உழைத்துக்கொண்டிருப்பது சாதனை தான். விஜய் ஒரு புத்தகம் போன்றவர். அவரிடம் இருந்து மற்றவர்கள் கற்றுக்கொள்ளலாம். அவர் ரொம்ப ஸ்மார்ட். அதனால் தான் அவரை சூப்பர்ஸ்டார் என்கிறார்கள் ” என்று கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.