கொரோனா தாக்கிய எய்ம்ஸ் டாக்டர் மனைவிக்கு குழந்தை பிறந்தது- குழந்தைக்கு கொரோனா இல்லை!

உலகம் முழுவதையும் ஆக்கிரமித்து வரும்  கொரோனா வைரஸ் யாரையும் விட்டுவைக்கவில்லை.

By Rebekal | Published: Apr 04, 2020 06:54 PM

உலகம் முழுவதையும் ஆக்கிரமித்து வரும்  கொரோனா வைரஸ் யாரையும் விட்டுவைக்கவில்லை. இந்தியாவையும் தற்பொழுது அச்சுறுத்தி வருகிறது. 3000 மக்கள் இந்த வைரசுக்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவருக்கு இந்த வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டது.

சில நாட்களிலேயே அவரது நிறைமாத கர்ப்பிணியாகிய மனைவிக்கும் இந்த வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனால் தீவிர கண்காணிப்பில் இருந்த அவருக்கு, தற்போது அழகிய ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஆனால், அவரின் குழந்தைக்கு இந்த வைரஸ் தொற்று சற்றும் இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Step2: Place in ads Display sections

unicc