அரசியல் கட்சி தலைவர்களுடன் ஏப்ரல் 8ம் தேதி பிரதமர் மோடி ஆலோசனை

கொரோனா குறித்து நாடாளுமன்றத்தில் அரசியல் கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், மத்திய மாநில அரசு வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன்படி நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதனிடையே நேற்று பிரதமர் மோடி கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில முதல்வர்களுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.பின்னர் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக விளையாட்டு பிரபலங்களுடன் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் கொரோனா குறித்து நாடாளுமன்றத்தில் அரசியல் கட்சி தலைவர்களுடன் ஏப்ரல் 8-ஆம் தேதி காலை 11 மணிக்கு காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.