பேனர்கள் விழுந்து உயிரிழப்புகள் ஏற்பட அதிகாரிகளின் மெத்தனமே காரணம் : சென்னை உயர்நீதிமன்றம்

அதிமுக பேனர் விழுந்து இளம் பெண் சுபஸ்ரீ மரணம் அடைய அதிகாரிகளின் மெத்தனப்போக்கே

By Fahad | Published: Mar 28 2020 05:13 PM

அதிமுக பேனர் விழுந்து இளம் பெண் சுபஸ்ரீ மரணம் அடைய அதிகாரிகளின் மெத்தனப்போக்கே காரணம் என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்தது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.அப்போது உயர்நீதிமன்றம் தரப்பில் கருத்து கூறுகையில்,அதிமுக பேனர் விழுந்து இளம் பெண் சுபஸ்ரீ மரணம் அடைய அதிகாரிகளின் மெத்தனப்போக்கே காரணம்.அதிகாரிகள் அரசியல் கட்சியினருக்கே விசுவாசமாக செயல்படுகின்றனர். இது போன்ற விபத்துக்கு ரூ 2 லட்சம் நிவாரணம் கொடுத்துவிட்டு, உத்தரவை மீண்டும் மதிக்காமல் செல்கின்றனர். மேலும்  எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பேனர் வைப்பதில் விதிமீறல்கள் தொடர்கின்றன என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.  மேலும் இது தொடர்பான வழக்கினை தாமாக முன்வந்து விசாரிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.