அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் -அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில்,  தமிழகத்தில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் திமுக, அமமுக தவிர்த்து மற்ற கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

மாநில வளர்ச்சி திட்டங்கள் குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உடன் அமைச்சர் தங்கமணி சந்தித்தார், கூட்டணி பேச்சுவார்த்தைக்காக சந்திக்கவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Leave a Comment