அதிமுக-பாமக கூட்டணி !!தொடங்கியது பேச்சுவார்த்தை !!

  • மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில்  பாமக மற்றும் அதிமுக கூட்டணி பேச்சு நடைபெற்றது.

கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த பாமக மற்றும் அதிமுக சென்னையில் உள்ள ஹோட்டலில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் அதிமுக பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த சென்னை கிரவுன் பிளாசா ஹோட்டலுக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்றுள்ளனர்.

கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணியும் சென்றுள்ளனர்.அங்கு கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Comment