அமெரிக்காவில் அவரச நிலை….16 மாகாணங்கள் எதிர்ப்பு….!!

  • அமெரிக்கா – மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர்
  • அவசரநிலை பிரகடனம்
  • 16 மாகாணம் ட்ரம்ப்_க்கு எதிர்ப்பு
  • நீதிமன்றத்தில் வழக்கு

அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் 40 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் தடுப்பு சுவர் கட்டியே தீருவேன்என்று என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்து வந்தார்.இந்நிலையில் எதிர்க்கட்சியினர் மற்றும் அமெரிக்காவின் பல்வேறு தரப்பு மக்களின் எதிர்ப்பு காரணமாக அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் கட்டும் நிதி மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்கவில்லை. இதையடுத்து  அமெரிக்காவில் அதிபர் ட்ரம்ப் அவசர நிலையை அறிவித்தார்.

அவரச நிலையை டிரம்ப் பிரகடனப்படுத்தியுள்ளதற்கு அந்நாட்டில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.குறிப்பாக கலிஃபோர்னியா, நியூ ஜெர்சி, நியூ யார்க் உட்பட 16 மாகாணங்கள், டிரம்ப் அறிவித்த அவரச நிலையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment