தெலங்கானா சட்டப்பேரவை தேர்தல்: 1 மணி நிலவரப்படி 49.15% வாக்குகள் பதிவு ...!

தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 49.15% வாக்குகள் பதிவாகியுள்ளது. ராஜஸ்தான்

By Fahad | Published: Apr 06 2020 01:48 AM

தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 49.15% வாக்குகள் பதிவாகியுள்ளது. ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய 2 மாநிலங்களில் ஒரே நாளில் தேர்தல் நடைபெறுகிறது. தெலங்கானா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் ஒரு திருநங்கை உள்பட 1,821 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நக்சலைட் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் மாலை 5 மணிக்கு பதில் 4 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு பெறுகிறது. இந்நிலையில் தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 49.15% வாக்குகள் பதிவாகியுள்ளது.