மதுபான பார்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் நடவடிக்கை- டாஸ்மாக் பொதுமேலாளர்…!!

சேலத்தில் மதுபான பார்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டாஸ்மாக் பொதுமேலாளர் எச்சரித்துள்ளார். பிளாஸ்டிக் பொருட்கள் தடை அமலுக்கு வந்துள்ள நிலையில், சேலம் நகர்ப்பகுதியில் உள்ள மதுபான பார்களில், டாஸ்மாக் பொதுமேலாளர் முத்துராமலிங்கம் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மத்திய பேருந்து நிலையம் அருகே இருந்த பாரில் ஆய்வு செய்தபோது, முற்றிலும் பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. பிளாஸ்டிக் இல்லாத பொருட்களை தொடர்ந்து பயன்படுத்துமாறு பார் நிர்வாகிகளுக்கு அவர் அறிவுரை வழங்கினார்.

புத்தாண்டு பரிசு….23 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரி குறைப்பு….!!

23 பொருட்கள் மற்றும் சேவை மீதான ஜிஎஸ்டி கட்டண குறைப்பு இன்றுமுதல் அமல்படுத்தப்படுகிறது.டெல்லியில் கடந்த டிசம்பர் 22ம் தேதி நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வரிவிகிதத்தில் பல்வேறு சீரமைப்புகள் மேற்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில், தொலைக்காட்சிப் பெட்டி, கணினி, பவர் பேங்க், டிஜிட்டல் கேமராக்கள், வீடியோ கேமராக்கள் உள்ளிட்ட 23 பொருட்கள் மற்றும் சேவை மீதான வரி 28 சதவிதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டது.சரக்கு வாகனங்களுக்கு 3ம் நபர் காப்பீடு பிரிமீயம் தொகை 18 சதவீதத்தில் இருந்து 12 … Read more