அமைச்சர் ஜெயக்குமார் பதவியை இழக்க நேரிடும் ! எம்.எல்.ஏ மிரட்டல் !

டிடிவி தினகரன் குறித்து தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தால் அமைச்சர் பதவியை இழக்க நேரிடும் என எம்.எல்.ஏ. வெற்றிவேல் தெரிவித்துள்ளார். டிடிவி தினகரனுக்கு எதிராக பேசினால் அமைச்சர் ஜெயக்குமார் கட்சி பதவியையும், அமைச்சர் பதவியையும் இழக்க நேரிடும் என தினகரன் ஆதரவான எம்.எல்.ஏ.  வெற்றிவேல் கூறியுள்ளார்.

அதிமுக அலுவலகத்துக்குள் தினகரன் நுழைய தடை-அதிமுகவில் பரபரப்பு!!!

அதிமுக அலுவலகத்துக்கு வருமாறு கட்சி நிர்வாகிகளுக்கு தினகரன் அழைப்பு விடுத்துள்ளது குறித்து தமிழக அமைச்சர்கள் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர். இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்த வழக்கில் கைது செய்யப்பட்ட தினகரன் கடந்த மாதம் ஜாமீனில் வெளியே வந்தார்.  அதிரடி அரசியலை காட்டாமல் இருந்த அவர் ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி முதல் தனது அரசியல் பணிகள் வேகமெடுக்கும் என்று தஞ்சாவூரில் நேற்று தெரிவித்திருந்தார்.  இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கு திட்டங்களை … Read more

அதிமுக தலைமையகத்துக்கு வாருங்கள் – மாவட்ட நிர்வாகிகளுக்கு தினகரன் அழைப்பு!

ஜெயலலிதா மறைவுக்கு பின்ன சசிகலா தலைமையில் ஒரு அணியும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும் செயல்பட்டு வந்தது. பின்னர் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா பெங்களூர் சிறையிலும், தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்ததாக டிடிவி.தினகரன் திகார் சிறையிலும் அடைக்கப்பட்டனர். இதையடுத்து, சசிகலா தலைமையில் செயல்பட்டு வந்த அணி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் செயல்பட தொடங்கியது. இதற்கிடையில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமாக இரட்டை இலையை கைப்பற்றுவதற்காக இரு அணிகளும் கடுமையாக போட்டி போட்டு கொண்டு இருக்கின்றன. இதை … Read more

அமைச்சர் ஜெயகுமாரை போட்டு தாக்கும் கமலஹாசனின் ரசிகர்கள்…!

உலக நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தமிழக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டு கூறியதால் அனைத்து அமைச்சர்களும் அவருக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.  இந்த நிலையில் இன்று காலை பேட்டியளித்த நிதியமைச்சர் ஜெயகுமார், கமல் இப்படியே பேசிக்கொண்டிருந்தால் அவர் மூன்றாம் பிறை கிளைமேக்ஸ் போல் மாறிவிட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருந்தார் அதற்கு டுவிட்டரில் பதிலளித்துள்ள கமல் ரசிகர்கள், ‘மூன்றாம் பிறை கிளைமாக்ஸ் காட்சி நடிப்புதான் அவருக்கு தேசிய விருதை பெற்று தந்தது, அதை போல … Read more

தனக்கு தொடர்ச்சியாக கொலை மிரட்டல்கள் வருவதாக ‘கக்கூஸ்’ ஆவணப் பட இயக்குநர் திவ்யா பாரதி தெரிவித்துள்ளார்.

மதுரை:ஆவணப் பட இயக்குநர் திவ்யா பாரதி, கடந்த வருடம் ‘கக்கூஸ்’ என்ற ஆவணப் படம் எடுத்திருந்தார். அந்தப் படம், மலம் அள்ளும் தொழிலாளர்களின் வேதனைகளையும் கஷ்டங்களையும் வெளிப்படுத்தும் விதமாக இருந்தது. அந்தப் படத்திற்கான ட்ரைலர் இணையத்தில் வெளியானவுடனேயே அந்த ஆவணப் படத்தை வெளியிடக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால், இந்த வருடத்தில் தொடக்கத்தில் ‘கக்கூஸ்’ படம் வெளியானது. இந்த நிலையில், 2009-ம் ஆண்டில் திவ்யா பாரதி மாணவியாக இருக்கும்போது போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கிற்காக, அவரை … Read more

தினகரன், திவாகரன் சேர்ந்துட்டாங்க… இனி ஓபிஎஸ் தனி மரம்- சம்பத் ஆவேசம்!

சென்னை : அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும், பொதுச்செயலாளர் சசிகலாவின் தம்பி திவாகரனும் இணைந்திருக்க வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம் என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் அணியில் இருந்து அனைவரும் சென்று விடுவார்கள். ஓபிஎஸ் தனிமரமாவார் என்றும் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். சசிகலாவின் அண்ணன் மனைவி சந்தானலட்சமி நேற்று உயிரிழந்தார். இதற்கான இறுதிச் சடங்கு ஏற்பாடுகள் தஞ்சாவூரில் நடைபெற்று வருகிறது. ஜெயலலிதா இறந்ததையடுத்து கட்சியை யார் கைப்பற்றுவது என்ற போட்டியில் டிடிவி. தினகரனும், சசிகலாவின் … Read more

முதல்ல கமல் அரசியலுக்கு வரட்டும் என வம்பு இழுக்கும்-முதல்வர் எடப்பாடி வாய்ஸ்

ராமேஸ்வரம்:நேற்று நடந்த டாக்டர்.ஏபிஜே.அப்துல்கலாம் நினைவு தின அனுசரிப்பு மற்றும் மணிமண்டபம் திறப்புவிழாவிற்கு வந்திருந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் உலகநாயகன் கமலஹாசன் தொடர்பான கேள்விகளை எழுப்பினர். அதற்கு பதில் அளிக்க மறுத்த முதல்வர் “அவர் ஒரு நடிகர்.. முதல்ல அவர் அரசியலுக்கு வரட்டும்…அதுக்கு அப்பறம் அவரை பற்றி நான் பேசுகிறேன்” என்று கூறிவிட்டார்.. இதை பார்க்கும் பொது வம்பு இழுப்பது போன்று உள்ளது.

பீகார் சட்டமன்றத்தில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு…தப்பிப்பாரா நிதிஷ்குமார்

நிதிஷ் குமார் தனது முதல்வர் பதவியை கடந்த  புதன்கிழமை அன்று மாலை திடீரென தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். பின்பு பீகார் அரசியலில் அதிரடி திருப்பமாக நிதிஷ் குமாருக்கு பாஜக ஆதரவு அளிக்க முன்வந்தது. இதையடுத்து நிதிஷ் குமார் நள்ளிரவில் மீண்டும் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதை பெற்றுக்கொண்ட பொறுப்பு ஆளுநர் மாநிலத்தில் அரசை அமைக்குமாறு நிதிஷ் குமாருக்கு அழைப்பு விடுத்தார். அதன்படி வியாழக்கிழமையன்று காலை பீகார் முதல்வராக 6வது முறையாக … Read more

மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தியவர்கள் கைது:காவல் துறை எச்சரிக்கை!!!

மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளனர். நீட் தேர்வுக்கு எதிராக திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள்  உள்ளிட்ட கட்சிகள் மனிதச்சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சட்டம் சீர்குலைந்து என்று போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது.

“ரொம்ப பேசாத, இப்பல்லாம் பேசுனாலே குண்டாஸ்ல கைது பண்றாங்க பாத்துக்கோ”..தரமணி படத்தின் போஸ்டர்..

சென்னை: இயக்குனர் ராமின் அடுத்த படைப்பான  தரமணி படத்தின் first look போஸ்டர் மிகவும் வித்தியாசமான முறையிலும் இன்றைய காலகட்டத்தில் நடக்கும் நிகழ்வுகளின் பிரதிபலிப்பாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது… அப்படத்தின் போஸ்டரில் “ரொம்ப பேசாத, இப்பல்லாம் பேசுனாலே குண்டாஸ்ல கைது பண்றாங்க பாத்துக்கோ”என்று கதாநாயகன்,நாயகியை பார்த்து கூறுவது போல் உள்ளது. ஏனெனில் இந்தியாவில் சமீபகாலமாக அரசையோ அல்லது அரசியல்வாதிகளையோ கருத்தால் விமர்சனம் செய்தால் உடனே குண்டர் சட்டத்தில் கைது பண்ணுகிறது இந்த மத்திய பிஜேபி மற்றும் மாநில … Read more