“ரொம்ப பேசாத, இப்பல்லாம் பேசுனாலே குண்டாஸ்ல கைது பண்றாங்க பாத்துக்கோ”..தரமணி படத்தின் போஸ்டர்..

“ரொம்ப பேசாத, இப்பல்லாம் பேசுனாலே குண்டாஸ்ல கைது பண்றாங்க பாத்துக்கோ”..தரமணி படத்தின் போஸ்டர்..

Default Image

சென்னை: இயக்குனர் ராமின் அடுத்த படைப்பான  தரமணி படத்தின் first look போஸ்டர் மிகவும் வித்தியாசமான முறையிலும் இன்றைய காலகட்டத்தில் நடக்கும் நிகழ்வுகளின் பிரதிபலிப்பாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது…
அப்படத்தின் போஸ்டரில் “ரொம்ப பேசாத, இப்பல்லாம் பேசுனாலே குண்டாஸ்ல கைது பண்றாங்க பாத்துக்கோ”என்று கதாநாயகன்,நாயகியை பார்த்து கூறுவது போல் உள்ளது.

ஏனெனில் இந்தியாவில் சமீபகாலமாக அரசையோ அல்லது அரசியல்வாதிகளையோ கருத்தால் விமர்சனம் செய்தால் உடனே குண்டர் சட்டத்தில் கைது பண்ணுகிறது இந்த மத்திய பிஜேபி மற்றும் மாநில அதிமுக அரசுகள்.

உதாரணமாக டெல்லி JNU மாணவர்கள் கண்ணைய குமார் மற்றும் உமர் காலித்,தமிழகத்தில் மக்கள் அதிகாரம் பாடகர் கோவன் மற்றும் சமீபத்தில் கல்லூரி வளாகத்தில் நின்று நெடுவாசல் மற்றும் கதிராமங்களத்தில் இருக்கும் ONGC நிறுவனத்தால் ஏற்படும் பாதிப்பு தொடர்பான நோட்டீஸ் விநியோகித்த மாணவி வளர்மதி ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளது இந்த அரசுகள்.

ஜனநாயகத்தின் மாண்புகளை அழிக்கும் எத்தனை அடக்குமுறைகள் வந்தாலும் தவறுகளை தட்டிகேட்கும் மனிதர்களுக்கு இங்கு பயமில்லை என்பது வரலாறு நமக்கு கற்று கொடுத்த பாடம்.

இதனை உணர்த்தும் விதமாகத்தான் அந்த படத்தின் போஸ்டர் அமைந்துள்ளது.சமகால அரசியலை திரையில் சொல்லும் இயக்குனர் ராமிற்கு வாழ்த்துக்கள்..

செய்தி:இ.சுரேஷ்

Join our channel google news Youtube