ஸ்டாலின் முதல்வர் பதவிக்கு சரிபட்டு வரமாட்டார்- பன்னீர்செல்வம்

ஸ்டாலின் முதல்வர் பதவிக்கு சரிபட்டு வரமாட்டார் என்று துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் வடக்கு மாவட்டம் விக்கிரவாண்டி ஒன்றியம் காணை பகுதியில்அதிமுக வேட்பாளர்  முத்தமிழ்செல்வனை  ஆதரித்து துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்பொழுது அவர் பேசுகையில், ஸ்டாலின் முதல்வர் பதவிக்கு சரிபட்டு வரமாட்டார், அந்த ராசி அவருக்கு இல்லை .அதிமுகவில் சாதாரண தொண்டன் முதல்வராக முடியும், ஆனால் திமுகவில் அது முடியாது என்று தெரிவித்துள்ளார்.