ஏப்பம் விடக்கூடா தடையா ?அலறும் அதிகாரிகள் ……

பாரத ஸ்டேட் வங்கியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், பணியிடத்தில் ஆடைக்கட்டுப்பாடு உள்ளிட்ட ஒழுக்கம் சார்ந்த நடைமுறைகள் குறித்த அறிவுறுத்தல்கள் இடம்பெற்றுள்ளன. இதில் முக்கிய குறிப்பாக அலுவலக ஊழியர்கள் மற்றம் சேவை மைய அதிகாரிகள், வாடிக்கையாளர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது பெரிதாக ஏப்பம் விடவேண்டாம் எனக் கூறப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் இடையூறாக உணர நேரிடும் என்றும், சிறிய அளவிலான ஏப்பம் எனில் பிரச்சனை இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
source: dinasuvadu.com

Leave a Comment