ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா புகார்…!சி.பி.ஐ விசாரணை செய்ய வேண்டும்…! திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் பணப்பட்டியல் பிரச்சனையில்  சி.பி.ஐ விசாரணைக்கு இந்திய தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது.இதில் தமிழக அரசு தொடர்பாக பதில் அளிக்கப்பட்டது.அதில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.பின்னர் இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் , அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் பிற்பகல் 2.15 மணிக்கு ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.வருமான வரித்துறை சோதனை நடத்தி ஓராண்டான நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.வழக்கு விசாரணை டிசம்பர் 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Related image
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் பணப்பட்டியல் பிரச்சனையில் வருமான வரித்துறையின் அறிக்கைப்படியான புகாரின் மீது சி.பி.ஐ விசாரணைக்கு இந்திய தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்ய வேண்டும் .ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டியல் விவகாரத்தில் முறைகேடுகளுக்கு காரணமானவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Leave a Comment