இந்திய ரூபாயின் வடிவில் நின்று மாணவ-மாணவியர் சாதனை!

இந்திய ரூபாயின் அடையாள வடிவில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில்  1717பேர் நின்று

By Fahad | Published: Mar 29 2020 03:31 AM

இந்திய ரூபாயின் அடையாள வடிவில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில்  1717பேர் நின்று சாதனை படைத்துள்ளனர். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் மருத்துவச் செலவுக்கு நிதி திரட்டுவதற்காக ரோட்டரி சங்கத்தின் சார்பில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கின்னஸ் சாதனை முயற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அண்ணா பல்கலைக்கழகம், ராணி மேரிக் கல்லூரி ஆகியவற்றைச் சேர்ந்த மாணவ மாணவியர் 1717பேர் இந்திய ரூபாய்க்கான அடையாள வடிவில் நின்றனர். இந்தச் சாதனையைப் படம்பிடித்துக் கின்னஸ் உலகச் சாதனைப் பதிவுக்கு அனுப்பப்பட உள்ளது. இதற்கு முன் ரஷ்யாவில் 1503பேர் ரஷ்ய நாணயமான ரூபிளின் வடிவில் நின்றதே சாதனையாக உள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

More News From TAMIL NEWS